வரும் காலங்களில் பார்வையாளர்களை அதிகளவில் ஈட்டுவதற்கு WordPress SEO in tamil Optimization என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகம். ஏனெனில் கோடிக்கணக்கான மக்கள் தன் தேடலுக்கான விடையினை பெற தேடுபொறிகளில் உங்களது வலைதளத்தினை அதிகாரப்பூர்வமாக இணைப்பதன் மூலம் உங்களது பார்வையாளர்களை அதிகரிக்க முடியும்
2010-ல் தொடங்கப்பட்ட இரு WordPress வலைதளத்தினை ஒப்பீடுக்காக ஏடுத்துக்கொள்ளுங்கள். ஒன்று SEO Optimize செய்தது. மற்றொன்று செய்யாதது. 2020-ல் SEO Optimize செய்த வலைதளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 2,00,000 ஆகும். ஆனால் SEO Optimize செய்யாத வலைதளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 5,000 மட்டுமே.
இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏன் ஏன்று சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் உங்களது பார்வையாளர்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் காலம் கடத்தகூடிய செயலாகும்.
ஆனால், பார்வையாளர்கள் அவர்களுக்கான வலைதளத்தினை தேடுபொறிகள் மூலம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சுலபமான ஒரு செயலாகம். இதன் காரணமாகவே மேற்கண்ட இரு வலைதளங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை வேறுபட்டு காணப்படுகிறது.
சரி, SEO என்றால் என்ன? SEO என்பது Search Engine Optimization ஆகும். ஆதாவது இணையத்தில் உள்ள தேடுபொறிகிளல் (Google, Bing, Yahoo மற்றும் பல) உங்களது வலைதளத்தில் உள்ள அனைத்து பக்கங்களையும் தேடுபொறிகளில் சமர்ப்பித்து தேடுபொறிகளில் உங்களது வலைதளத்தனை பார்வையானர்களுக்கு கொண்டு செல்லலாம்.
இந்த வலைபதிவில் SEO Optimization பற்றி விரிவாக கண்டு, உங்களது வலைதளத்தினை தேடுபொறிகளில் முன்னிலை படுத்துவதற்கான சில நடைமுறைக்களைப்பற்றி காணலாம்.
Best Practices for WordPress SEO in tamil
சிறந்த SEO நடைமுறைகளை பற்றி பார்ப்பதற்கு முன்பு SEO பற்றிய சிறு விளக்கத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக SEO ஆனது இரண்டு முக்கிய வகைகளை உள்ளடக்கியது ஒன்று On-Page SEO மற்றொன்று Off-Page SEO ஆகும்.
On-Page SEO Optimization என்பது நீங்கள் உங்களது வலைதளத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் உக்தியாகும். எடுத்துக்காட்டாக, Keywords, Title, URL மற்றும் Meta Tags ஆகும்.
Off-Page SEO Optimization என்பது உங்களது வலைதளத்தினை தேடுபொறிகளில் சிறந்த இடத்திற்கு முன்னேறுவதற்கு மற்ற வலைதளங்களில் உங்களது வலைதளத்தினை இணைக்கும் பொருட்டு நீங்கள் செய்ய வேண்டிய வேலையாகும். எடுத்துக்காட்டாக Link Building, Guest Blogging மற்றும் பல.
இரண்டாவதாக உங்கள் வலைதளம் தேடுபொறிகளில் சிறந்த இடத்தை பெறுவதற்கான வழிகள் Whitehat SEO மற்றும் Blackhat SEO ஆகும்.
Whitehat SEO என்பது மேற்கண்ட On-Page மற்றும் Off-Page SEO போன்ற வகைகளை முறையாக பின்பற்றி உங்களது வலைதளத்தினை தேடுபொறிகளில் முக்கிய இடத்தை பிடிப்பதாகும். சுலபமாக கூறவேண்டுமென்றால் நேர்வழியில் தேடுபொறிகளில் இடத்தை தக்க வைப்பதாகும்.
Blackhat SEO என்பது மேற்கண்ட இரு வகைகளையும் முன்னும் பின் முரணாக செய்து தேடு பொறிகளை முட்டாளாக்கி இடத்தினை பிடிப்பதாகும். இப்படி Blackhat SEO பின்பற்றுவதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக பார்வையாளர்களை தேடுபொறிகளின் மூலம் ஈட்ட முடியும். ஆனால், அதை வருடக்கணக்கில் தக்க வைத்துக்கொள்ள இயலாது.
Keyword Research
வலைதளத்தின் SEO Optimization என்பது வலைதளத்திற்கான சிறந்த Keyword-களை தேர்தெடுப்பதிலிருந்து தொடங்குகிறது. ஏனைனில் Google-ல் தேடுபொறியானது Keyword-ஐ பொறுத்த வலைதளத்திற்கான இடத்தினை தேடுபொறியல் வெளியிடுகிறது. எனவே, Keyword வலைதள்திற்கு மிகு முக்கியமாகும்.
நீங்கள் வேண்டுமான “Premium WordPress Themes” மற்றும் “Premium WordPress Plugins”-கள் WordPress வலைதளத்திற்கான சிறந்த இடத்தினை Google தேடுபொறியில் கிடைக்க உதவுகின்றன என்று கூறலாம். அதுவும் சரியான ஒன்று தான்.
ஆனால் Keyword-ஐ பயன்படுத்தி தேடுபொறியில் சிறந்த இடத்தை பிடிப்பதே சிறந்த வழியாகும். Keyword-களை தேர்தெடுப்பதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உங்கள் வலைதளத்திற்கான Keyword-களை தேடி தேர்தெடுப்பது மற்றொன்று உங்களுக்கான வலைதள போட்டியாளரை (Competitor) கண்டுபிடித்து அவர்கள்மூலம் Keyword-களை தேர்தெடுக்க (Competitor Research) தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களுக்கு Keyword-களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டால் உலகின் தலைசிறந்த SEO வல்லுநர்கள் வழங்கும் மதிப்புடைய (Premium) மற்றும் இலவச (Freemium) செயலிகளை பயன்படுத்தி Keyword-களை சுலபமாக தேர்ந்தெடுக்கலாம்.
நாங்கள் உங்களுக்கு பரிந்துரைப்பது SEMrush செயலி ஆகும். இது ஒரு இலவச செயலியாகும். மேலும், பணம் செலுத்துவதன் மூலம் கூடுதலாக பலன்பளை பெறலாம்.
Focus On Content
உங்கள் வலைதளத்திற்கான சிறந்த Keyword-களை தேர்ந்தெடுத்துவிட்டாலும் உங்கள் வலைதள கட்டுறைகளில் (Blog Post) பார்வையாளர்களின் கேள்விக்கான பதில் இல்லையெனில் பார்வையாளர்களின் கேள்விக்கான பதில் இல்லையெனில் பார்வையாளர்கள் உங்கள் வலைதளத்தினை தவிர்க்க வாய்ப்புகள் உண்டு. மேலும், உங்கள் வலைபதிவுகளில் பார்வையாளர்களின் தேடலுக்கு சரியான மற்றும் சிறந்த பதிலை கொடுக்க முயலுங்கள்.
எனவே, உங்கள் வலைபதிவுகளை பார்வையாளர்களின் தேடுதல் நோக்கத்தில் எழுதுங்கள். மேலும் அந்த பதிவில் முழுமையான விளக்கத்தினையும் எடுத்துறையுங்கள்.
அனைவருக்கும் ஒரு கேள்வி எழலாம். ஒரு வலைபதிவில் எத்தலை வார்த்தைகளை கொணடு எழுத வேண்டுமென்று? இது ஒரு பொதுவான கேள்வியாகும். சரி பதிலை காணலாம்.
ஒரு சிறந்த வலைபதிவானது 2000 வார்த்தைகளை உள்ளடக்க வேண்டும்.குறைந்தபட்சம் 1500-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தி வலைபதிவினை உருவாக்குங்கள்.
Use Premium Themes & Plugins
இன்றைய நாட்களில் WordPress தளத்தின் உதவியடன் வலைதளம் உருவாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், தற்போது ஆன்லைனில் பதிவேற்றப்படும் 3-ல் 2 வலைதளங்கள் WordPress -ஐ கொண்டு உருவாக்கப்படுகின்றன. .
WordPress வலைதளத்திற்காகவே 1000-த்திற்கும் மேற்பட்ட Theme-களும் Plugin-களும் ஆன்லைனில் கொட்டிக்கிடைக்கின்றன. இதில் இலவசமானவையும் உண்டு மதிப்புமிக்கவையும் உண்டு.
இலவச Theme-களை உங்கள் வலைதளத்திற்கு உபயோகிப்பதன்மூலம் உங்களுக்கான தேவையான முழுமையாக ஒரு வலைதளத்தினை உருவாக்குவது கடினம். மேலும், அவைகள் தொடர்ந்து இலவசமாக வழங்குவார்களா என்பது சந்தேகமே. சில Theme-கள் காலப்போக்கில் அவர்களுக்கான விளம்பரம்களை இலவசமாக உபயோகிப்பதன் காரணமாக உங்கள் வலைதளத்தில் வெளியிடுவார்கள்.
Premium Theme-களை பொறுத்தவரையில் எங்களை கருத்துக்களை இரண்டு வகையாக கூறுகிறோம். ஒன்று வலைபதிவுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான WordPress வலைதளங்கள் உருவாக்க Astra Theme சிறந்ததாகும். இவை வாழ்நாள் முழுவதும் ஒரு வலைதளத்திற்கு 3500 மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது.
மற்றொன்று வணிக ரீதியிலான (E-Commerce) வலைதளங்களை உருவாக்குவதற்கு சில கூடுதலான Tool-கள் தேவைப்படும். அந்த வகையில் நாங்கள் பரிந்துறைப்பது Porto Theme ஆகும். இவை வாழ்நாள் முழுவதும் ஒரு வலைதளத்திற்கு 4200 மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது.
உங்கள் வலைதளத்திற்கான SEO Plugins-களை பொறுத்தவரையில் SEOPress Plugin ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விலை வருடத்திற்கு 3000 மட்டுமே. மேலும் இந்த Plugin மூலம் எண்ணிக்கையற்ற வலைதள்ங்களுக்கு உபயோகித்து கொள்ளலாம். தேவையில்லை எனில் எந்த நேரமும் Cancel செய்து கொள்ளலாம். Cancel செய்த பிறகும் உங்களால் Premium சேவையினை பெற இயலும் ஆனால் Update-களை பெற இயலாது. மேலும் அதிகப்படியான Feature-களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SEO Friendly URLs
உங்கள் வலைதள URL’கள் வலைதளத்திற்கான SEO சேவையிலும், பார்வையாளர்களின் புரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைப்பது வலைதள வடிவமைப்பாளரின் கடனமாகும்.
எனெனில், WordPress தளத்தில் கீழ்க்கண்ட விதங்களில் URL-களை வருவாக்க இயலும்
மேற்கண்ட மூள்று வகையான URL’களை ஒப்பிட்டு பாருங்கள். மூன்றில் எந்த URL பார்வையாளர்களுக்கு மிக எளிமையாக புரியும் மற்றும் Google தேடுபொறிகளில் வலைதள இடத்தை நிர்ணயிக்கும் Google Spider-கள் எந்த வகையான URL-களை குறுகிய நேரத்தில் Crawl செய்யும் என்பதை ஒப்பிட்டு கண்டுபிடியுங்கள்.
நீங்கள் தேர்வு செய்த மூன்றாவது URL மிகச் சரியானதாகும். எனவே, மேற்படியான URL வடிவத்தினை உங்கள் வலைதளத்தில் பயன்படுத்துவது முக்கியமானதாவும்.
Mobile Friendly Website
இன்றைய காலகட்டத்தில் கணினி பார்வையாளர்களை விட மொபைல் தளத்தில் உள்ள பார்வையாளர்களே அதிகம். எனவே, உங்களது வலைதளம் மொபைல் பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்வது அவசியம்.
உங்களது வலைதளம் மொபைல் தளத்திற்கு ஏற்றாற்போல் இல்லை எனும் பட்டசத்தில் உங்கள் கிளிக் த்ரூவ் ரேட் (CTR) மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தேடுபொறியில் உங்களது தரவரிசையினை பாதிக்கும்.
உங்கள் வலைதளத்தினை கணினி மற்றும் மொபைல் தளத்திற்கு ஏற்றாபோல் வடிவமைக்கவேண்டும் என்றும், அதை Responsive Web Design (RWD) என்றும் Google பரிந்துரைக்கிறது.
நாம் Premium Theme-களை உபயோகப்படுத்தினால் அவை மொபைல் தளத்திறாகு ஏற்றாற்போல் இயங்கக்கூடியதாகும். தற்போதைய நிலை அனைத்து Premium Themeகளும் RWD நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வலைதளத்தினை RWD நுட்பத்தின்மூலம் வடிவமைக்கப்பட்ட Asona என்ற Premium Theme-ஐ கொண்டு வடிவமைத்துள்ளேன்.
உங்களது வலைதளம் மொபைல் தளத்திற்கு ஏற்றாற்போல் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட Link-ஐ கிளிக் செய்து பாருங்கள்.
Improve Page Speed
உங்கள் வலைதளம் Load ஆவதற்கு அதிப்படியான நேரம் எடுத்துக்கொண்டால் அது வலைதளத்திற்கான Bounce rate பார்வையாளர்களை பெருமளவில் பாதிக்கும். மேலும், வலைதள வாடிக்கையாளர்களில் நம்பிக்கையினை கெடுக்கும். எனவே, Page Load Speed மிக மிக முக்கியமாகும்.
ஒரு வலைதளத்தின் Load Speed ஆனது உங்களது Hosting மற்றும் வலைபக்கத்தின் எடையினை பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடக்கூடியதாகும். எனவே, மேற்கண்ட இரு முறையிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
முதலில் Hosting-ஐ பொறுத்து Load Speed-ஐ துரிதப்படுத்துவது எப்படி என்பதை காணலாம். ஒரு வேளை உங்களது வலைதளத்தின் கருத்துக்கள் உலகில் உள்ள அனைவருக்கு உபயோகப்படும் என்றால் உங்கள் Hosting-ல் CDN ( Content Delivery Network) உபயோகிப்பது அவசியமாகும். எனெனில் உங்கள் Hosting Server America-வில் இருந்தால் CDN-ஐ உபயோகப்படுத்தி அனைத்து மக்களுக்கும் முடிந்த அளவு வேகமாக கொண்டு செல்லலாம்.
உங்களது வலைதளம் ஒரு கூட்டம் அல்லது சமூகத்திற்கு மட்டுமே உரித்தானது என்றால் (வலைதள மொழி தமிழில் இருப்பது) உங்களது பார்வையாளர்களுக்கு அருகில் உள்ள Hosting Server-ஐ தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லதாகும்.
தமிழ் மொழில் வலைதளத்தினை என்னைப்போல் உருவாக்க நினைக்கும் அனைவருக்கும் Cloudways Hosting சிறந்ததாகும். எனெனி்ல் Cloudways Server Bangalore-வில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, நம்முடைய 90 சதவிகித பார்வையாளர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் அசைக்க முடியாத உண்மையாகும்.
HTTPS as a Positive Signal
உங்கள் வலைதள பார்வையாளர்களுக்கு சிறந்த மற்றும் வேகமான கருத்துக்களை சேர்ப்பதை காட்டிலும் பாதுகாப்பான முறையில் பார்வையாளர்களுக்கு சேர்ப்பது என்பது மிகவும் முக்கியம். இதை Google Algorithm ஒவ்வொறு வருடமும் பரிந்துரைக்கிறது.
சரி, நமது வலைதளத்திற்கான SSL எனும் Secure Socket Layer-ஐ பதிவேற்றம் செய்வதன்மூலம் நமது வலைதளமானது HTTP-யிலிருந்து HTTPS என மாறும். இந்த மாற்றமானது உங்களது பார்வையாளர்களின் விபரங்கள் சுழபமாக Hack செய்வதிலிருந்து பாதுகாக்கும். தற்போதைய சுழலில் அனைத்து விதமான புதிய Hosting சேவையினை பெறுவோருக்கு SSL சேவை இலவசமாகமே கிடைக்கிறது. மேலும், அதிகப்படியான வலைதளத்தினை உருபாக்குபவர்கள் SSL உபயோகப்படுத்துவது மிகவும் அவசியமானகும்.
இப்படி உங்கள் வலைதளத்தில் SSL பதிவேற்றம் செய்து HTTPS-யினை enable செய்துவிட்டால் எங்களின் Google தரவரிசையில் மிகப்பெரிய மாற்ற காணுமா? என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். ஆனால் மாற்றம் காணலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Submit Website to Search Engine
மேற்கண்ட அனைத்து விதமான வேலையினை பூர்த்தி செய்த பின்னர் உங்கள் வலைதளத்தினை தேடுபொறிகளிடம் சமர்ப்பிப்பது என்பது மிக முக்கியமாகும். எனைனில் தற்போதைய காலத்தில் 10 சதவிகித பார்வையாளர்கள் நண்பர்கிடமிருந்தும் 30 சதவிகித பார்வையாளர்கள் Social Media-விலிருந்தும் மீதமுள்ள 60 சதவிகித அதிகப்படியான பார்வையாளர்கள் தேடுபொறிகளிடமிருந்தே கிடைக்கிறது.
அவற்றினை நிராகரிப்பது என்பது தற்கொலைக்கு முயல்வது போன்றதாகும். தேடுபொறிகளை பொறுத்தமட்டில் Google, Bing மற்றும் Yahoo இந்தியாவில் உபயோகிக்கப்படுவதாகும்.
அவற்றினை நிராகரிப்பது என்பது தற்கொலைக்கு முயல்வது போன்றதாகும். தேடுபொறிகளை பொறுத்தமட்டில் Google, Bing மற்றும் Yahoo இந்தியாவில் உபயோகிக்கப்படுவதாகும்.
Sitemaps
Sitemaps என்பது வலைதளத்தின் ஒரு வரைபடம் போன்றதாகும். இவற்றில் வலைதளத்தில் உள்ள பக்கங்கள், வகைகள் மற்றும் பலவற்றினை பார்வையாளர்கள் மற்றும் தேடுபொறிகளுக்கு எற்றாற்போல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
எனவே, பார்வையாளர் தங்களுக்கு தேவையான கருத்துக்களை சுலபமாக பெறவும், தேடுபொறிகள் அனைத்து வலைதள கருத்துக்களையும் Crawl செய்வதற்கு பயன்படுகிறது.
Conclusion
உங்களது WordPress வலைதளம் SEO முழுமையான செய்த பின்னர் Organic முறையில் பார்வையாளர்களை பெறுவதற்கு நேரம் எடுக்கும். இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் 6-யிலிருந்து 8 மாதங்கள் எடுக்கும். இருப்பினும் உங்களது வலைதளத்தினை தாங்களுக்கு தெரிந்து வகையில் (E-mail, Mobile, Social Media Marketing) கொண்டு செல்ல மறவாதீர்கள்.