How to install WordPress on localhost in Tamil

by | Jun 7, 2020 | 0 comments

பெரும்பாலான வலைதளங்கள் நேரடியாக ஆன்லைனில் Host செய்யப்படுகின்றன. எனவே Hosting பெறாமல் WordPress வலைத்தளத்தினை நீங்கள் உருவாக்க நினைக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள்  வலைதளம் நேரலைக்கு வருவதற்கு முன்பே அதை சிறந்த முறையில் வடிவமைத்து பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றை உருவாக்க நினைப்பீர்கள்.

Recommened : How to Create a blog in Tamil

அப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுக்கு தேவையானது Local WP ஆகும். இதனைக் கொண்டு Local Host மூலம் ஒரு WordPress வலைதளத்தினை உருவாக்க முடியும் மற்றும் WordPress வலைதளத்தினை Clone செய்து Local Host-ல் இருந்து நேரலை(Online)-க்கு கொண்டு செல்லவும் முடியும்.எனவே, இந்த வலைப்பதிவில் Local Development மூலம் எப்படி Local WP–ல் அதாவது Local Host-ஐ பயன்படுத்தி ஒரு வலைதளத்தை உருவாக்குவது என்பது பற்றி காணலாம்.

Install wordPress on localhost in Tamil

Step 1

முதலில் LocalWP என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வது அவசியமாகும். எனவே, LocalWP என்ற லிங்க்கை கிளிக் செய்து LocalWP-ன் முகப்பு பக்கத்திற்கு செல்லவும்.

wordpress on localhost

Step 2

பிறகு அதிலுள்ள Free Download என்ற பொத்தானை கிளிக் செய்து உங்கள் கணினியில் செயல் திறனை பொறுத்து Software-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Step 3

பதிவிறக்கம் செய்த Software-ஐ டபுள் கிளிக் செய்து LocalWP சாப்ட்வேரை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

Step 4

முதலில் வரும் பக்கத்தில் உங்களுக்கு தேவையானவற்றை கிளிக் செய்து Next என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
wordpress on localhost

Step 5

உங்கள் கணினியில் எந்த இடத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு பக்கம் தோன்றும். தேவை என்றால் அவற்றையும் மாற்றிக்கொண்டு Install என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
how to install wordpress on localhost

Step 6

இப்பொழுது உங்கள் கணினியில் LocalWP இன்ஸ்டால் செய்யப்பட்டு உபயோகிக்க தயாராக இருக்கும். எனவே, நீங்கள் Finish என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
how to install wordpress on localhost

Create a WordPress site on LocalWP in Tamil

Step 1

உங்கள் கணினியில் உள்ள LocalWP என்ற மென்பொருளை Open செய்தவுடன் உங்களுக்கான ஒரு பக்கம் தோன்றும். தோன்றும் பக்கத்தில் Create a New Site என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் புதிதாக ஒரு வலைதளத்தை நீங்கள் உருவாக்க இயலும்.
install wordpress on localhost

Step 2

பிறகு தோன்றும் பக்கத்தில் உங்கள் வலைதளத்தின் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். Advanced Options என்ற பகுதியில் உங்களுக்கு தேவைப்பட்டால் வலைதளத்தின் நினைவக இடத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.
how to install wordpress on localhost

Step 3

அடுத்ததாக Choose your Environment என்ற பக்கத்தில் Preferred என இருக்கும். நீங்கள் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Wordpress on localhost in tamil

Step 4

அதன்பிறகே Setup WordPress என்ற பக்கம் தோன்றும். அதில் உங்கள் வலைதளத்தில் Username, Password மற்றும் Email ஆகியவற்றை உள்ளீடு செய்து Add Site என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Wordpress on localhost in tamil

Step 5

இப்பொழுது உங்களுக்கான ஒரு WordPress வலைதளம் உங்கள் கணினியில் Webhosting இல்லாமல் LocalWP மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது.

Wordpress on localhost in tamil
1. முகப்பு பக்கத்தில் உள்ள Admin என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வலைதளத்தின் ADMIN பகுதிக்கு உங்களை கொண்டு செல்லும்.
install wordpress on localhost

2. முகப்பு பக்கத்தில் உள்ள View Site என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வலைதளம் ஆனது Local Host மூலம் View ஆவதை நீங்கள் காணலாம்.

install wordpress on localhost
3. முகப்பு பக்கத்தில் கீழ்புறம் உள்ள Live Link என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வலைதளத்தை நேரடியாக Online-ன் அந்த Link-ன் மூலம் காணலாம்.
install wordpress on localhost

இப்படி நீங்கள் ஒரு WordPress வலைதளத்தை உருவாக்கிவிட்டு, மேற்படி உங்கள் வலைதளத்திற்கான Domain name மற்றும் Webhosting ஆகியவற்றை Register செய்து நீங்கள் உங்கள் வலைதளத்தில் நீங்கள் விரும்பிய Domain-ல் Host செய்யலாம்.

Written By kjoprasanna

Related Posts

How to increase website speed in Tamil

How to increase website speed in Tamil

ஒரு  வலைத்தளத்தினை நன்கு செயல்படுகிறது என்று எவ்வாறு கூறுகிறோம்? கண்டிப்பாக அவன் வேகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அப்படித்தானே!!!இந்த வலைப்பதிவில்...

How to Backup a WordPress Site in Tamil

How to Backup a WordPress Site in Tamil

உங்கள் Wordpress வலைதளத்தை இலவசமாக Backup செய்வதற்கான ஒரு வழியை தேடுகிறீர்கள் என்றால் Updraft plus உங்களுக்கு தேவையான ஒன்றாகும். ஏனெனில், இவற்றைப் பயன்படுத்தி...

How to set up web push notifications in Tamil

How to set up web push notifications in Tamil

உங்கள் வலைதளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உங்களது Update-களை Notification ஆக உங்கள் பார்வையாளர்களுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.இந்த...

How to activate free SSL in Tamil

How to activate free SSL in Tamil

SSL என்பது Secure Sockets Layer ஆகும். இவை உங்கள் வலைதளத்தின் அனைத்து பக்கங்களையும் http-யிலிருந்து https-ஆக Encript செய்து வலைதளத்தை பாதுகாப்பாக வைக்க...

Connect Google Analytics to WordPress in Tamil

Connect Google Analytics to WordPress in Tamil

உங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த தற்போது உள்ள பார்வையாளர்களில் விருப்பத்தை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு வலைதளத்தை செயல்படுத்துவது அதிக...

Write English without grammatical error – Grammarly in Tamil

Write English without grammatical error – Grammarly in Tamil

நான் அனைவராலும் ஆங்கிலத்தில் எழுத முடியும். ஆனால், எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையின்றி எழுத முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். எனவே இவற்றை சரி...

How to get Google indexing within a minute

How to get Google indexing within a minute

உங்கள் வலைதளத்தில் Rankmath SEO setup செய்து உங்கள் வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகளை Google search Console பயன்படுத்தி Google search Engine-ல் Indexing...

How to install Elementor PRO Plugin in Tamil

How to install Elementor PRO Plugin in Tamil

உலகில் பலர் Wordpress என்னும் செயலியை பயன்படுத்தி அவர்களது வலைதளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வலைதளத்தை உருவாக்குவதற்கு ஒரு Theme மட்டுமே...

How to Setup Rank Math SEO plugin in Tamil

How to Setup Rank Math SEO plugin in Tamil

வலைதளங்களுக்கு SEO Optimization என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். SEO Optimization-ஐ பொறுத்தவரையில் சிறந்த SEO Plugin-ஐ உபயோகித்து Setup செய்வது...

Top 8 must use chrome extensions in Tamil

Top 8 must use chrome extensions in Tamil

ஆன்லைன் வருமாநீங்கள் ஒரு வலைத்தளத்தை வடிவமைப்பதற்கான சில யோசனைகளை பல வலைதளங்கள் இடமிருந்து பெற நினைக்கின்றீர்கள் எனில் இந்த Google Chrome Extensions...

Comments

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *