பெரும்பாலான வலைதளங்கள் நேரடியாக ஆன்லைனில் Host செய்யப்படுகின்றன. எனவே Hosting பெறாமல் WordPress வலைத்தளத்தினை நீங்கள் உருவாக்க நினைக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் வலைதளம் நேரலைக்கு வருவதற்கு முன்பே அதை சிறந்த முறையில் வடிவமைத்து பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றை உருவாக்க நினைப்பீர்கள்.
அப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுக்கு தேவையானது Local WP ஆகும். இதனைக் கொண்டு Local Host மூலம் ஒரு WordPress வலைதளத்தினை உருவாக்க முடியும் மற்றும் WordPress வலைதளத்தினை Clone செய்து Local Host-ல் இருந்து நேரலை(Online)-க்கு கொண்டு செல்லவும் முடியும்.
எனவே, இந்த வலைப்பதிவில் Local Development மூலம் எப்படி Local WP–ல் அதாவது Local Host-ஐ பயன்படுத்தி ஒரு வலைதளத்தை உருவாக்குவது என்பது பற்றி காணலாம்.
Install WordPress on localhost in Tamil
Step 1
முதலில் LocalWP என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வது அவசியமாகும். எனவே, LocalWP என்ற லிங்க்கை கிளிக் செய்து LocalWP-ன் முகப்பு பக்கத்திற்கு செல்லவும்.

Step 2
பிறகு அதிலுள்ள Free Download என்ற பொத்தானை கிளிக் செய்து உங்கள் கணினியில் செயல் திறனை பொறுத்து Software-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Step 3
பதிவிறக்கம் செய்த Software-ஐ Doubelகிளிக் செய்து LocalWP சாப்ட்வேரை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
Step 4
முதலில் வரும் பக்கத்தில் உங்களுக்கு தேவையானவற்றை கிளிக் செய்து Next என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 5
உங்கள் கணினியில் எந்த இடத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு பக்கம் தோன்றும். தேவை என்றால் அவற்றையும் மாற்றிக்கொண்டு Install என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 6
இப்பொழுது உங்கள் கணினியில் LocalWP இன்ஸ்டால் செய்யப்பட்டு உபயோகிக்க தயாராக இருக்கும். எனவே, நீங்கள் Finish என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Create a WordPress site on LocalWP in Tamil
Step 1
உங்கள் கணினியில் உள்ள LocalWP என்ற மென்பொருளை Open செய்தவுடன் உங்களுக்கான ஒரு பக்கம் தோன்றும். தோன்றும் பக்கத்தில் Create a New Site என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் புதிதாக ஒரு வலைதளத்தை நீங்கள் உருவாக்க இயலும்.

Step 2
பிறகு தோன்றும் பக்கத்தில் உங்கள் வலைதளத்தின் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். Advanced Options என்ற பகுதியில் உங்களுக்கு தேவைப்பட்டால் வலைதளத்தின் நினைவக இடத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

Step 3
அடுத்ததாக Choose your Environment என்ற பக்கத்தில் Preferred என இருக்கும். நீங்கள் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 4
அதன்பிறகே Setup WordPress என்ற பக்கம் தோன்றும். அதில் உங்கள் வலைதளத்தில் Username, Password மற்றும் Email ஆகியவற்றை உள்ளீடு செய்து Add Site என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 5
இப்பொழுது உங்களுக்கான ஒரு WordPress வலைதளம் உங்கள் கணினியில் Webhosting இல்லாமல் LocalWP மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது.

முகப்பு பக்கத்தில் உள்ள Admin என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வலைதளத்தின் ADMIN பகுதிக்கு உங்களை கொண்டு செல்லும்.

முகப்பு பக்கத்தில் உள்ள View Site என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வலைதளம் ஆனது Local Host மூலம் View ஆவதை நீங்கள் காணலாம்.

முகப்பு பக்கத்தில் கீழ்புறம் உள்ள Live Link என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வலைதளத்தை நேரடியாக Online-ன் அந்த Link-ன் மூலம் காணலாம்.

இப்படி நீங்கள் ஒரு WordPress வலைதளத்தை உருவாக்கிவிட்டு, மேற்படி உங்கள் வலைதளத்திற்கான Domain name மற்றும் Webhosting ஆகியவற்றை Register செய்து நீங்கள் உங்கள் வலைதளத்தில் நீங்கள் விரும்பிய Domain-ல் Host செய்யலாம்.