நான் அனைவராலும் ஆங்கிலத்தில் எழுத முடியும். ஆனால், எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையின்றி எழுத முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். எனவே இவற்றை சரி செய்வதற்காகவே ஆன்லைனில் பல Writing Assistant-கள் உள்ளன. அவற்றில் சிறந்தது Grammarly என்னும் Writing Assistant தான்.
Grammarly என்பது ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை தானியங்கியாக சரி செய்வதற்கான வாய்ப்புகளை ஆன்லைனில் இலவசமாக கொடுக்கின்றது.

எனவே, Install Grammarly பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆங்கில எழுத்துக்கள் மேம்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Register and Install Grammarly
Step 1
முதலில் கீழே உள்ள Link-ஐ கிளிக் செய்து ஆரம்பிக்க வேண்டும். Click here.
Step 2
இப்பொழுது Grammarly-ன் முகப்பு பக்கம் தோன்றும். அதில் வலது மேற்புறமுள்ள Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 3
அடுத்ததாக Member Login என்ற பக்கம் தோன்றும். அதில் Continue with Google என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Step 4
அடுத்ததாக உங்கள் Google Account கணக்கை Grammarly உடன் இணைப்பதற்காக உங்கள் கூகுள் கணக்கின் Email-ஐ உள்ளீடு செய்து Next என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 5
அடுத்ததாக உங்கள் கூகுள் கணக்கின் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்கள் Grammarly கணக்கை உருவாக்க Next என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 6
இப்பொழுது உங்களுக்கான Grammarly-ன் கணக்கு துவங்கப்பட்டு உங்களுக்கான ஒரு பக்கம் தோன்றும். அதிலுள்ள New என்ற Option-ஐ பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கான ஒரு புதிய பக்கத்தை Open செய்து எழுத ஆரம்பிக்கலாம்.

Step 7
தேவையான எழுத்துக்களை இந்தப் பக்கத்தில் பதிவிட்டு உங்கள் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளை நீக்குவதற்கு Grammarly-ன் சரியான வாய்ப்புகளை நீங்கள் விரும்பிய வண்ணம் தேர்ந்தெடுத்து அவற்றை சரி செய்ய இயலும்.

Grammarly Apps
Grammarly மூன்று வெவ்வேறு விதமான செயலிகளை கொண்டுள்ளது. இவை மூன்று செயலிகளையும் நீங்கள் இலவசமாக உபயோகித்துக்கொள்ளலாம்.

MS Office – Addon
நீங்கள் Microsoft Word உபயோகிப்பவர் என்றால் அதில் ஏற்படும் எழுத்துப் பிழைகளை சரி செய்வதற்கு check spelling Option-ஐ பயன்படுத்தி எழுத்துப் பிழைகளை சரி செய்து கொள்ளலாம். ஆனால், Word-ல் இலக்கணப் பிழைகளை சரி செய்வதற்கான சாத்தியம் இல்லை.Grammarly-ன் MS-Word App-ஐ பயன்படுத்தி உங்கள் MS-Word பக்கத்திலேயே எழுத்துக்களை மட்டுமின்றி இலக்கணப் பிழைகளையும் சரி செய்து கொள்ளலாம்.

Chrome Extension
MS-Word-ல் நீங்கள் எழுத்துப்பிழைகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளாவது உண்டு. ஆனால், நீங்கள் ஆன்லைனில் உபயோகிக்கும் (Mail, Chat) எழுத்துக்களில் எழுத்துப் பிழையை கூட தானியங்கியாக சரி செய்து கொள்ள முடியாது.நீங்கள் எழுத மட்டுமே முடியும். அதனால் Grammarly-ன் Google Chrome Extension-ஐ பயன்படுத்தி இவற்றையும் எளிதாக சரி செய்து கொள்ளலாம்.
Recommended: Must use Google Chrome Extension in Tamil
எடுத்துக்காட்டாக உங்கள் Mail அனுப்பும்போது எற்படும் எழுத்துப்பிழைகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் Grammarly-ல் உண்டு.

Windows Application
Grammarly-ன் விண்டோஸ் செயலியை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் Application-களிலும் ஏற்படும் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளை சுலபமான முறையில் திருத்திக் கொள்ளலாம்.
Conclusion
அனைவரும் ஆங்கிலத்தை எழுத்துப் பிழையின்றியும், இலக்கண பிழையின்றியும் எழுதுவதற்கான ஆசை Grammarly மூலம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் உங்களில் ஆங்கில அறிவையும் மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக Grammarly-ல் உள்ளது.

அனைவரும் ஆங்கிலத்தை எழுத்துப் பிழையின்றியும், இலக்கண பிழையின்றியும் எழுதுவதற்கான ஆசை Grammarly மூலம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் உங்களில் ஆங்கில அறிவையும் மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக Grammarly-ல் உள்ளது.