Earn money online in tamil

The step by step guide to work from home in tamil

earn money online

Earn money online in tamil

Earn money online in Tamil

ஆன்லைன் வருமானம் என்பது சாத்தியமா? அல்லது ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா? போன்ற கேள்விகள் உங்களுக்கு பல பேர் இருக்கலாம் அதிலும் என் பதிவினை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும் அப்படி இருப்பதால்தான் இதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இந்த பதிவின் மூலம் அதை விளக்க விழைகிறேன். Earn money online in Tamilஇந்த கேள்விகளுக்கு பதில் ஆனது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிராண்டை பொருத்தே அமைகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து மூலதன வியாபாரங்களும் வேலையின்மை பொறுத்து அமைகிறது. இதனையே மக்களை ஏமாற்ற விரும்பும் நபர்களும் பின்பற்றி வேலையில்லாத மக்களிடமிருந்து பணத்தைக் கைப்பற்ற முனைப்புடன் செயல்படுகின்றன.இந்த நோக்கத்தை நீங்கள் புரிந்து அதை பகுத்தறிவதன் மூலம் உங்களின் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதற்கான வழி பிரகாசமாக்கப்படும் என்பதை முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் தேர்வு செய்யும் வேலைகளை முடித்தவுடன் நீங்கள் அதற்கான பயனை அடைய விரும்பினால் இதுவும் தங்களுக்கு சாத்தியப்படாத ஒன்றாகும். ஏனென்றால் தங்களது வேலை நீங்கள் செய்யும் வேலையின் தரத்திலிருந்தும் உங்களின் அனுகுமுறையிலிருந்தும் அதன் தரம் மீண்டும் உயரும். இவையே உங்களுக்கு வேலையே அளிக்க விரும்புகின்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.எனவே முதலில் ஊதியத்தை எதிர்பார்க்காமல் உங்கள் வேலையை முழுமையாகவும், தரம் குறையாமலும் செய்து முடிப்பதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைப் பெற உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் வேலையையே மூலதனமாகக் கொண்டு ஆன்லைன் வேலைகளை அணுகுவதன் மூலம் நீங்கள் கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் ஊதியத்தை விட அதிகமாக ஊதியத்தை பெற நீங்கள் தகுதியானவர் ஆகிறீர்கள்.சரி அப்படி ஆன்லைனில் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்கான வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் நான் உங்களுக்கு வழங்கும் வழிமுறை மிகவும் குறைந்தது. அதாவது மூன்று முக்கியமான, தரமான பிராண்டுகளை உங்களிடம் பகிர்வதற்து ஆர்வமுடன் உள்ளேன்.

1 . Youtube in Tamil

2. Affiliate Marketing in Tamil

3. Blogging in Tamil

Earn money form youtube in Tamil

நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே Youtube ஆனது கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். இதனைக் கொண்டு மக்களுக்குகாக நீங்கள் அறிந்த விஷயங்களை பகிர்வதன் மூலம் உங்களது வீடியோக்கள் உலகில் உள்ள அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக அமைகிறது.

நீங்கள் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்வதன் அனைத்து வகையான மக்களாலும் அதை பார்க்க முடியும். ஏனெனில், Youtube ஆனது நாம் எதிர்பார்க்காத அளவில் வளர்ந்துள்ளது. ஏனெனில் நீங்கள் உபயோகப்படுத்தும் Android மொபைலில் அனைவரும் உபயோகிக்கும் App-ல் 75% இணையதள இடத்தை Youtube நிரப்புகிறது. எனவே நீங்கள் உங்களது தொழிலையோ, உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையோ உலக மக்களிடம் கொண்டு சென்றடைய அது வழி வகுக்கிறது.

இதனை பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து ஊதியம் பெறுவதற்கும் Youtube ஆனது எந்த விதமான முன்பணத்தையும் முன்பே பெறுவதில்லை. உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் பணம் பெறாமல் எப்படி ஊதியம் கொடுக்க முடியும். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களது பிராண்டை உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்குத்தான் அதிகம் வருமானம் பெற நீங்கள் வழிவகை செய்கிறீர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெறும் 100 சதவிகித வருமானத்திலிருந்து உங்களுக்கு 40 முதல் 50 சதவிகித ஊதியத்தை மட்டுமே உங்களிடம் கொடுக்கிறார்கள்

Affiliate marketing in Tamil

Affiliate Marketing என்பது உங்களின் மூலம் ஒரு பொருளை மற்றவர்களிடம் விற்பதற்கு நீங்கள் ஒரு அங்கம் வகிப்பவர் என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு நீங்கள் விற்றுக் கொடுத்த பொருளின் தொகையில் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் தொகையை உங்களுக்கு ஊதியமாக தருகின்றனர்இந்த வகையில் வேலையை செய்வதற்கு உங்களுக்கு பெரிய திறமைகள் இருக்க வேண்டும் என்பது இல்லை மொபைல் இருந்தாலே போதுமானதாகும். இதன் மூலம் ஒரு பொருளின் Affiliate Link-களை மற்றவர்களுக்கு அனுப்பி அதை விற்பதன் மூலம் உங்களது கணக்கில் ஒவ்வொன்றாக சேமிக்கப்பட்டு அதை உங்களுக்கு ஊதியமாக தருகின்றனர்.இந்த வகையான செயல்களை வழங்க நிறைய பிராண்டுகள் தங்களது பொருட்களை விற்பதற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் அதிலிருந்து சிறு தொகையை உங்களுக்கு ஊதியமாகவும் அளிக்கின்றனர்

இது போன்ற செயல்களை Amazon, Flipkart போன்ற முன்னணி நிறுவனங்களும் வளர்ந்துவரும் Tatacliq போன்ற நிறுவனங்களும் முந்திக் கொண்டு உங்களின்மூலம் மக்களிடம் சென்றடைய விரும்புகின்றனர்.

ஆனால், அவர்கள் உங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் 2 முதல் 5 உண்மையாக அவர்களது பொருட்களை மற்றவர்களுக்கு விற்பதன் மூலம் நீங்கள் அவர்களின் சேவையினை தொடர்வதற்கு ஆயத்தமாக உள்ளீர்கள் என்று அவர்கள் தீர்மானம் செய்து உங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.இந்த வகையான செயல்கள் மூலம் தங்களுக்கே உரித்தான Affiliate Link-களை அவர்கள் கொடுக்கின்றனர். அதனை நீங்கள் Whatsapp, Website மூலம் அதனை மற்றவர்களுக்கு கொண்டு செல்வதனால் அவை விற்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால் அதிலிருந்து கிடைக்கு இலாப தொகையிலிருந்து நீங்கள் உங்களுக்கான தொகையினை பணமாகப் பெறலாம்.

Earn money from blogging in Tamil

பிளாக்கிங் என்பது அனைவரும் உபயோகிக்க சற்று கடினமான ஒன்றாகும். ஆனால் நீங்கள் சுலபமாக கற்றுக்கொள்ளலாம் அப்படி கற்று கொண்டால் மேற்கண்ட Youtube மற்றும் Affiliate Marketing போன்ற வேலைகளையும் சேர்த்து இரண்டு மடங்கு கூடுதலாக உங்களுக்கு வருமானம் ஈட்டித் தர இந்த வகையான Blogging வழிவகுக்கிறது.

பிளாக்கிங் செய்வதற்கு உங்களுக்கே உரித்தான ஒரு வலைதளத்தை வைத்திருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வலைதளங்களை இலவசமாகவும் பெற இயலும் மற்றும் பணத்தை செலவழித்தும் பெற இயலும். ஆனால் இலவசமாக நீங்கள் பேறும் வலைதளமானது தரத்தில் குறைந்ததாகவும் மற்றும் முக்கியமானதாக பார்ப்பதற்கு அழகில் குறைந்ததாகவும் இருக்கும். இதனால் உங்களது வலைதளத்தை பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆள்பாதி ஆடைபாதி என்பதையும் நினைவில் வைக்க மறந்து விடாதீர்கள்.

நான் முன்பு கூறியது போலவே மேற்கண்ட இரண்டு வகையான ஊதியம் ஈட்டும் முறைகளையும் சேர்த்து உங்களின் ஒரே வலைதளத்தில் வழங்கமுடியும். உங்கள் வலைதளத்தில் பதிவினை விடுவதன் மூலம் மக்கள் அதைப் பார்க்க முயலுகிறார்கள் இதனால் உங்களது பதிவில் உள்ள Google adsence விளம்பரங்களை அவர்கள் கிளிக் செய்து பார்க்க விரும்புகிறார்கள் எனில் உங்களுக்கு அவர்கள் கிளிக் செய்ததற்காக ஒரு வருவாய் உண்டு. இதனையும் சேர்த்து உங்கள் வலைதள பதிவில் உங்களது Youtube Video மற்றும் உங்களது Affiliate Link ஆகியவற்றினை பயன்படுத்துவதன் மூலம் உங்களின ஊதியம் ஈட்டும் செயல்முறையானது இரட்டிப்பாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இது போன்ற விளம்பரங்களை கூகுள் மட்டுமல்லாமல் இன்னும் நிரைய பிராண்டுகள் கொடுக்கின்றனர். குறிப்பாக Media.net போன்ற பிராண்டுகள் Google adsence ஒத்தே தரத்திலும் வருமானத்திலும் உள்ளது.

இதை உபயோகிப்பதற்கு ஒரு வலைதளம் போதுமானதான ஒன்றாகும். பிளாக்கி செய்வதற்கான ஒரு வலைதளத்தை உருவாக்க உங்களுக்கு 4000 முதல் 6500 வரை பணம் செலவாகும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்ற சிலவகையான பிராண்டை உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் நினைவாக்க இயலும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் மட்டுமே சம்பாதிக்கும் நோக்கத்தினை புறம்தள்ளி வேலை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் அதன் அழகு மற்றும் தரத்தின் மீது அதிக நேரத்தை செலவிடுவதனால் உங்களுக்கான ஊதியம் அதிகம் கிடைப்பது மட்டுமல்லாமல் அந்த ஊதியத்தை எதிர்காலத்திலும் தொடர்வதற்கான வழிமுறைகளுக்கு இன்றே அடித்தளம் போடுங்கள்.

Recommened : How to create Blog in Tamil

Conclusion

அதனைக்கொண்டு நீங்கள் இல்லாமல் உங்களது தலைமுறையினர் கூட அதன் பலனை பெறலாம். எடுத்துக்காட்டாக ஜவஹர்லால் நேரு எழுதிய Discovery of India என்ற புத்தகத்தை தற்போதைய குடிமகன் ஒருவன் வாங்கி பயனடையிறான் எனில் நேருவின் எழுத்துரிமைக்காக அவருக்கு ஒரு பங்கு அதன் மொத்த தொகையிலிருந்து செல்லும். இதனால் நேருவுக்குப் பிறகு இந்திராகாந்தியும் அவருக்கு பிறகு ராஜீவ் காந்தியும் தற்போது ராஜீவ் காந்திக்கு பிறகு ராகுல் காந்தியும் அதன் பயனை அடைகிறார்கள். உங்களது வேலையானது அப்படி தெளிவான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களது தலைமுறையினருக்கு கூட அதன் பலாபனம் கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களது உழைப்பானது என்றும் மறையாது என்பதை எப்பொழுதும் மறந்துவிடாதீர்கள். எனவே உழைப்பின் மீது அதிக கவனத்தை செலுத்தி உங்களது வேலைகளை செய்வதன் மூலம் உங்கள் வேலையானது அனைவரும் போற்றதக்கதாக மாறுகிறது.