Blogger Meaning in Tamil
Blogger Meaning in tamil என்பது இரண்டு அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல்லாகும். ஒன்று Blogger என்ற பெயரைக் கொண்ட பிளாக்கிங் Plotform மற்றொன்று Blog-ல் வலைப்பதிவுகளை எழுதும் நபரையும் குறிக்கும்.
Blogger.com என்பது 1998 இல் Pyra Labs ஆல் உருவாக்கப்பட்டு 2003 இல் Google ஆல் கையகப்படுத்தப்பட்ட ஒரு ஆன்லைன் வலைப்பதிவு (Blog) உருவாக்கும் சேவையாகும். வலைபதிவர்கள் அவர்களின் கட்டுறைகளை இதில் சமர்ப்பித்து அனைவரிடமும் கலந்துறையாடலாம்.
Blogspot Meaning in Tamil
Blogspot (Blogger) என்பது பிளாக்கிங்கிற்கான சிறந்த தளங்களில் ஒன்றாகும். குறிப்பாக நீங்கள் தொடக்கநிலை வலைபதிவராக இருந்தால், இது உங்களுக்கு இலவச துணை டொமைன் (Sub-Domain) மற்றும் Hosting வழங்குகிறது.
Pros and cons of using Blogger
அதிகப்படிான நன்மை மற்றும் தீமைகளை கூறி உங்கள் மனதை மாற்ற விரும்பவில்லை. எனவே சில நன்னை மற்றும் தீமைகளை பற்றி காணலாம்.
Pros
- It is entirely free
- Free SSL certificate
- Easy to use blogging platforms
- Faster indexing on Google
- Secure and reliable
Cons
- Limited themes and templates
- Lack of customization
- It lacks eCommerce features
- Google owns total control
- Poor customer support
How to create a blog on Blogger in Tamil
தற்பொழுது Google-ன் இந்த இலவச Blogger Plotform-ஐ கொண்டு எவ்வாறு ஒரு வலைபதிவினை (Blog) உருவாக்குவது என்பதை பற்றி விரிவாக காணலாம்.
Log in to Blogger
http://www.blogger.com/home என்ற வலைதளை முகவரியை மூலம் உங்கள் Gmil ID மற்றும் கடவுச்சொல் (Password) பயன்படுத்தி உள்நுழையலாம். உங்களிடம் கூகுள் கணக்கு இல்லையென்றால், இலவசமாக ஒன்றை உருவாக்கி பின்னர் Blogger முகப்புப்பக்கத்திற்கு வரவும். கூகிள் பிளாக்கரை உபயோகிப்பதற்கு ஒரு Google கணக்கு தேவைப்படும்.

Choose a name for your blog
உங்களுடைய வலைபதிவு உள்ளடகத்திற்கு ஏற்ற ஒரு தலைப்பினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

Choose a URL for your blog
ஒவ்வொரு வலைதளத்திற்கு URL என்றபது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே. டொமைன் பெயர் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்,

எனவே நீங்கள் விரும்பும் பெயர் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால், The Blog Address is Availlable என்று சொல்லும் வரை நீங்கள் வேறு டொமைன் பெயரை முயற்சிக்க வேண்டும்.
Confirm your display name
உங்கள் வலைப்பதிவு Google தரவரிசையில் சிறந்த இடத்தை பெறஉதவ, காட்சிப் பெயரில் ஒரு முக்கிய (வலைபதிவிற்கு ஏற்ற) சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, மேலே உள்ள Screen Shot-ல் [Blogger tutorial in Tamil] என என்றுடைய வலைபதிவிற்கு பெயர் அமைத்தேன் என்றால் என்னுடைய கருத்து மற்றும் வலைபதிவு Blogger tutorial in Tamil என்பது Google-க்கு புரிந்து Blogger tutorial in Tamil போன்ற தேடுதல்களில் என்னுடை வலைபதிவிற்கு ஒரு சிறந்த இடத்தினை அமைக்கும்.
Visit Your Website
உங்கள் Google Search பட்டியில் உங்கள் புதிய வலைப்பதிவின் முகவரியை உள்ளிடவும், உங்கள் Blogger இணையதளம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். முதலில் தோற்றம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் அதன் வடிவமைப்பை அழகாகவும், தொழில் ரீதியாகவும் மாற்றுவது எப்படி என்பதை பற்றி நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்.

How to change a theme on Blogger
உங்களது Blogger Dashboard-ல் இடது கை Menu-வில் உள்ள Theme என்பதை கிளிக் செய்யவும்.

கிடைக்கக்கூடிய பல Theme-களிலிருந்து நீங்கள் விரும்பும் Theme-ஐ கிளிக் செய்து Apply என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

தேர்வு செய்ய நிறைய Blogspot தீம்கள் உள்ளன, ஆனால் Contempo, Soho, Emporio, Notable அல்லது Essential ஆகியவற்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
Blog Visibility in Search Engine
உங்கள் வலைப்பதிவானது Search Engine தெரிகின்றதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.
அதற்கு Blogger Dashboard-ல் இடது கை Menu-வில் உள்ள Privacy என்பதை கிளிக் செய்யவும்.

அவற்றில் உள்ள Visible to Search Engine என்ற Option-ஐ Enable செய்யவேண்டும்.
How to add a favicon
Favicon என்பது ஒரு இணையதளத்தைத் உபயோகிக்கும் போது உலாவியின் தலை பக்கத்தில் இருக்கும் சிறிய படமாகும். Blogger-ன் Default Favicon-ஐ மாற்ற இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
- Layout -> Change Favicon;
- 100 KB க்கும் குறைவான சதுரப் படத்தைப் பதிவேற்றம் செய்யவும்.
- Save என்பதைக் கிளிக் செய்யவும்.
How to add a widget
உங்கள் வலைபதிவில் பட்டியல்கள் மற்றும் லேபிள்களைக் காட்ட அல்லது ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் சுயவிவரத்தைக் காட்ட கேஜெட்களைப் பயன்படுத்தவும்.
அதற்கு Blogger Dashboard-ல் இடது கை Menu-வில் உள்ள Layout என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் மாற்ற விரும்பும் பகுதியில் கேஜெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்
Popup Window-ல் கேஜெட்டைத் தேர்ந்தெடுத்து Insert என்பதைக் கிளிக் செய்யவும்
கீழ்-இடது மூலையில் உள்ள Save என்பதைக் கிளிக் செய்யவும்
How to create new pages for your blog
பிளாக்கரில் “About” அல்லது “Contact” போன்ற நிலையான உள்ளடக்கத்திற்கான பக்கங்களை நீங்கள் உருவாக்கலாம். அவை உங்கள் வலைப்பதிவின் தலைபக்கத்தில் இணைப்புகளாக காட்டப்படும்.
அதற்கு Blogger Dashboard-ல் இடது கை Menu-வில் உள்ள Layout என்பதை கிளிக் செய்யவும். அந்த பக்கத்தில் உளள Main Menu என்ற Option-ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவையான Menu-களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
How to publish a page on Blogspot
Blogspot இல், நீங்கள் ஒரு பக்கத்தை உருவாக்கி அதை உங்கள் மேற்கண்ட விபரப்படி வலைப்பதிவில் சேர்க்கலாம். About me, contact us, privacy, disclaimer மற்றும் பல்வேறு வகையான பக்கங்களை நீங்கள் உருவாக்கலாம்.

- இடது கை மெனு பட்டியலில் இருந்து, New Page-ஐ தேர்ந்தெடுக்கவும்
- பக்கத்தின் தலைப்பை உள்ளிடவும்;
- பக்கத்திற்கான உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்;
- பக்கங்களில் வாசகர் கருத்துகளை (Comments) முடக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது என்றால் முடக்கலாம்.
- உங்கள் பக்கத்தை வெளியிடுவதற்கு முன்பு சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
Connect with a custom domain
மேலே உள்ள Blogspot முக்கிய சொல்லுடன் பின்னொட்டு போடப்பட்ட ஒரு இலவச Blogspot டொமைனை பயன்படுத்தி நாங்கள் எவ்வாறு வலைபதிவு செய்தோம் என்பதைப் பார்த்திர்கள். இருப்பினும், நீங்கள் விரும்பினால், Custom டொமைனை வாங்கி, அதை Settings Menu-ஐ பயன்படுத்தி Custom Domain-ஐ சேர்க்க Add a custom domain என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் வாங்கிய டொமைன் பெயரை உள்ளிடவும்.