ஆன்லைன் வருமாநீங்கள் ஒரு வலைத்தளத்தை வடிவமைப்பதற்கான சில யோசனைகளை பல வலைதளங்கள் இடமிருந்து பெற நினைக்கின்றீர்கள் எனில் இந்த Google Chrome Extensions உங்களுக்கு உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட 8 வெவ்வேறான Chrome Extensions-களை பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம்.Must use chrome extensions in Tamil
நீங்கள் உங்களுடைய வலைதளத்திற்கான Traffic-யினை Google Analytics மூலமோ அல்லது உங்கள் WordPress Dashboard மூலமோ காண்கிறீர்கள் எனில் அதன் வேலையை இன்னும் சுலபமாக்க உங்களுக்கு இந்த Chrome Extension உதவியாக இருக்கும். இதனை உங்கள் Google Analytics கணக்கை கொண்டு Link செய்யும்போது உங்கள் வலைதளத்தில் Traffic-களை மட்டும் அந்தந்த பக்கத்தில் தலைப்பகுதியில் அனைத்து விதமான Traffic-களையும் காணலாம்.
நீங்கள் ஒரு வலைத்தளத்திற்கு SEO என்பது மிகவும் அவசியமானதாகும். இதற்கு Rankmath அல்லது Yoast போன்ற SEO Plugin-களை பயன்படுத்தி SEO Settings-ஐ முறைபடுத்தலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட Targeted Keywordஆனது மிகவும் அவசியம். எனவே, இந்த Chrome Extension-ஐ பயன்படுத்தி நீங்கள் Google-ல் search செய்யும் Keyword-களுக்கு நிகரான(ஒத்த) Targeted Keyword-ஐ
அறிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும்
நீங்கள் உங்களுடைய வலைத்தளத்திற்கு சிறந்த நிறத்தினை தீட்ட எண்ணுவீர்கள். ஆனால், உங்களுக்கு சிறந்த நிறத்தினை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தெரியாது. அதேவேளையில் கணினியில் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு சிறந்த நிறம் உங்கள் கண்களுக்குத் தென்படும். ஆனால் அந்த நிறத்தின் Color Code உங்களுக்கு தெரியாது. எனவே, இந்த Chrome Extension-ஐ பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான நிறத்தின் மீது Cursor-ஐ
வைத்தாள் அந்த நிறத்தின் Color Code கிடைத்துவிடும். அதனைக்கொண்டு நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அந்த நிறத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் WordPress வலைத்தளத்தில் Template, Widget மற்றும் Pictures பல இடங்களில் உபயோகிக்க வேண்டிய அவசியம் உண்டு. எந்த இடத்தில் எப்படிப்பட்ட நீள மற்றும் அகலம் கொண்ட Template, Widget மற்றும் புகைப்படத்தை உபயோகிப்பது என்பது குறித்து உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் பல வலைதளங்கள் இது போன்ற செயலினை சிறப்பாக கையாண்டுள்ளனர். எனவே, அதுபோன்ற ஒரு வலைத்தளத்தினை Open செய்து Dimensions என்ற Chrome Extensions-ஐ
பயன்படுத்தி அதன் நீளம் மற்றும் அகலத்தை துல்லியமாக கணக்கிட்டு உங்கள் வலைதளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Grammarly என்பது நாம் ஆங்கிலத்தில் எழுதும்போது ஏற்படும் சிறுசிறு இலக்கணப் பிழைகளை சுட்டிக்காட்டி அதனை மாற்றுவதற்கான சிறந்த சொற்களை Grammarly சிறந்த முறையில் எடுத்துரைக்கும். இதனைப் பயன்படுத்தி வலைப்பதிவுகளை எழுதுவதற்கு மட்டுமல்லாமல் சாதாரணமான ஒரு மெயில் அனுப்பும்போதும், சமூக வலைதளங்களில் மற்றவருடன் செய்யும்போதும் கூட இதனை கொண்டு ஆங்கில எழுத்துப் பிழைகளை சரி செய்யலாம். இதற்கு வலைதளத்தில் உங்களுக்கான ஒரு கணக்கை மற்றும் உருவாக்கினால் போதுமானதாகும்.
ஆன்லைனில் உபயோகிக்கும் எழுத்துருவை பொறுத்தவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் உள்ளன. இவற்றில் நமக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட எழுத்துருவை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவற்றை சரிசெய்வதற்கு இந்த Chrome Extension உங்களுக்கு உதவும். இதனைப் பயன்படுத்தி நீங்கள் ஆன்லைனில் காணும் எழுத்துருவின் பெயர்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். அறிந்து கொண்ட எழுத்துருவை உங்கள் வலைத்தளத்திலும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் வலைதளத்திற்காக நீங்கள் பல யோசனைகளை வேறு சில வலைதளங்கள் இடமிருந்து பெறுவதற்காக நீங்கள் ஆன்லைனில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அப்படித் தேடி உங்களுக்கு கிடைக்கும் அந்த பதிலினை நீங்கள் இந்த Chrome Extension மூலம் ஒரு புகைப்படமாக எடுத்து வைத்துக்கொள்ளலாம். அவற்றினை நீங்கள் விரும்பிய நேரம் செய்து அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் உங்களுக்கான ஒரு வலைத்தளத்தினை Elementor-ஐ பயன்படுத்தி Computer, Tablet மற்றும் Moblie ஆகிய தளங்களிலும் சிறப்பாக இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருப்பீர்கள். அதைப்போலவே மற்ற வலைதள வமைப்பாளர்களும் அவர்களுடைய வலைதளத்தினை வடிவமைத்திருப்பார்கள். அவர்களின் வலைதளமானது Tablet மற்றும் Moblie தளத்தில் எப்படி வடிவமைத்துள்ளார்கள் என்பதை நீங்கள் கம்ப்யூட்டரில்
உள்ள Browser-ல்
காண இயலாது. எனவே இந்த Chrome Extension-ஐ பயன்படுத்தி உங்கள் கணினியிலேயே Tablet மற்றும் Moblie தளங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை காணலாம்.