How to Backup a WordPress Site in Tamil

by | Jun 7, 2020 | 0 comments

உங்கள் WordPress வலைதளத்தை இலவசமாக Backup செய்வதற்கான ஒரு வழியை தேடுகிறீர்கள் என்றால் Updraft plus உங்களுக்கு தேவையான ஒன்றாகும். ஏனெனில், இவற்றைப் பயன்படுத்தி ஒரு கிளிக் மூலம் உங்களது வலைத்தளத்தினை Cloud Storage-ல் Backup செய்ய இயலும். மேலும் ஒரே கிளிக் மூலம் அவற்றை Restore செய்யவும் முடியும்.எனவே, இந்த வலைப்பதிவில் Updraft Plus மூலம் எப்படி ஒரு வலைதளத்தை Backup செய்வது என்பது குறித்து படிப்படியாக காணலாம்.இந்த வலைப்பதிவில் இறுதியில் உங்களுக்கு Updraft Plus பயன்படுத்தி WordPress வலைதளத்தை Backup எடுப்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

Recommened : How to earn money form blog in Tamil

What is Updraft Plus in Tamil

நீங்கள் ஒரு Wordpres வலைதளத்தை Backup செய்ய விரும்பினால் 1.5 கோடிக்கும் அதிகமான டவுன்லோட் உடன் உலகில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த Updraft Plus என்ற Plugin-ஐ தேர்ந்தெடுங்கள்.

Updraft Plus ஆனது மிகவும் எளிதானது. எனவே, அனைவராலும் பயன்படுத்த இயலும். மேலும் கீழ்கண்ட பல வழிமுறைகளின் மூலம் உங்கள் WordPress வலைதளத்தை Cloud Storage-ல் Backup செய்ய இயலும்.

  • Dropbox
  • Google Drive
  • Amazon S3
  • Dream Project

இந்த Plugin-ஐ பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறைகளை ஏதேனும் ஒன்றின் மூலம் உங்கள் WordPress வலைத்தளத்தினை Backup செய்யலாம் மற்றும் தானியங்கியாக உங்களது Files, Plugins மற்றும் Database ஆகியவற்றை Daily, Weekly மற்றும் Monthly போன்ற வழிமுறைகளில் Backup செய்ய இயலும்.

Install Updraft Plus Plugin in Tamil

Step 1

WordPress வலைத்தளத்தினை Backup செய்வதற்கு நீங்கள் முதலில் Updraft Plus Plugin-ஐ Install செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு உங்கள் WordPress Dashboard-க்கு சென்று Plugin மெனுவில் உள்ள Add New என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 2

Search பெட்டியில் Updraft Plus என உள்ளீடு செய்து கிடைக்கும் Plugin-ஐ Install செய்து Activate செய்ய வேண்டும்.

Setup wordpress Backup in Tamil

Step 1

வலைத்தளத்தினை Updraft Plus-ன் மூலம் பேக்கப் செய்வதற்கு உங்கள் WordPress Dashboard-ல் Settings என்ற மெனுவில் உள்ள Updraft Plus Backup என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Step 2

உங்களுக்கான Updraft Plus Plugin-ன் Dashboard தோன்றும். நீங்கள் அதில் உள்ள Backup/Restore என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

Step 3

உங்கள் WordPress வலைதளத்தை Manual Backup செய்வதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க நீங்கள் Automatic Backup-ஐ தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.எனவே, நீங்கள் Updraft Plus பக்கத்தில் உள்ள Settings என்ற மெனுவை கிளிக் செய்யவேண்டும்.

இவற்றில் உங்கள் வலைதளத்தின் கோப்புகளை எப்படியான முறையில் Backup எடுக்கலாம் என்பது பற்றி கீழே காணலாம்.

  • ஒவ்வொரு நாளும் 8 அல்லது 12 மணி நேரம்
  • தினசரி
  • வாராந்திரம், மாதாந்திரம்

இப்படிப்பட்ட பல வழிமுறைகளை கொண்டு உங்களின் WordPress வலைத்தளத்தை Backup செய்ய இயலும். எனவே, உங்களுக்கு தேவையான வழிமுறையினை தேர்ந்தெடுத்து தொடரவேண்டும்.

Step 4

இப்பொழுது உங்களது Remote Storage Location-ஐ தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது.

மேலே கண்ட பல வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி உங்கள் WordPress வலைதளத்தை Backup செய்ய இயலும். எனவே, உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் பரிந்துரைப்பது Google Drive ஆகும். எனவே, Google Drive என்ற Option தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

Step 5

நீங்கள் Google Drive Icon-ஐ தேர்ந்தெடுத்த உடன் புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அவற்றில் கூகுள் ட்ரைவில் உங்கள் வலைதளத்தை எந்த
Folder-ல் சேமிப்பது என்பது தொடர்பாக இருக்கும். அதில் தானியங்கி ஆகவே Updraft Plus என இருக்கும். இவற்றை நீங்கள் மாற்ற விரும்பினால் Updraft Plus Premium உதவியுடன் மாற்ற இயலும்.

Step 6

இலவசமாக தொடர விரும்பினால் போன்ற பெயரை மாற்றாமல் கீழ் உள்ள Save என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அப்பொழுது ஒரு பக்கம் தோன்றும்.

Step 7

இந்த பக்கத்தில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து உங்கள் கூகிள் கணக்கில் உள்நுழைந்து உங்கள் கோப்புகளை Updraft Plus நிர்வகிப்பதற்காக கீழே உள்ள allow என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் மூலம் உங்கள் அனைத்து பக்கங்களையும் Google Drive-ல் நேரடியாக சேமிக்க இயலும்.

Step 8

உங்களது வலைத்தளத்தை Updraft Plus-ஐ பயன்படுத்தி Google Drive-ல் பேக்கப் செய்யப்படுவதற்கு கடைசியாக Complete Setup என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் வேர்ட்பிரஸ் வலைதளத்தை சுலபமாக Backup செய்து விட்டோம். அடுத்ததாக எப்படி அவற்றை Restore செய்வது என்பது குறித்து காணலாம்.

Restore a WordPress site in Tamil

Step 1

உங்கள் வலைதளத்தை Backup செய்வதற்காக பல வழிமுறைகள் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை Restore செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும்.உங்கள் Updraft Plus Dashboard-ல் உள்ள Backup/Restore மெனுவில் Existing backups என்ற பகுதியில் நீங்கள் செய்த Backup-கள் வரிசைப்படி இருக்கும்.

Step 2

நீங்கள் Restore என்ற பொத்தானை கிளிக் செய்தவுடன் உங்கள் Backup விவரங்கள் நீங்கள் விரும்பும் Plusins,Themes,Uploads,Other மற்றும் Database போன்றவற்றை தேர்வு செய்து Restore செய்வதற்காக ஒரு பெட்டி தோன்றும்.அவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து Next என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 3

பிறகு உங்கள் வலைத்தளத்தை நீங்கள் தேர்ந்தெடுத்த முறையில் Restore ஆவதற்கு Restore என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Step 4

உங்கள் WordPress வலைதளம் Restore ஆவதற்கு சில விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அவை முடிந்தவுடன் Restore Successful என்ற பக்கம் தோன்றும்.

உங்கள் வலைதளம் வெற்றிகரமாக Restore செய்யப்பட்டுவிட்டது.வலைதளத்தின் Backup மற்றும் Restore பற்றிய இந்த வலைப்பதிவு உங்களுக்கு சிறந்த முறையில் எடுத்துரைக்கும் என நம்புகிறேன். ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் Comments பெட்டியில் பதிவிடுங்கள்.

Written By kjoprasanna

Related Posts

How to increase website speed in Tamil

How to increase website speed in Tamil

ஒரு  வலைத்தளத்தினை நன்கு செயல்படுகிறது என்று எவ்வாறு கூறுகிறோம்? கண்டிப்பாக அவன் வேகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அப்படித்தானே!!!இந்த வலைப்பதிவில்...

How to install WordPress on localhost in Tamil

How to install WordPress on localhost in Tamil

பெரும்பாலான வலைதளங்கள் நேரடியாக ஆன்லைனில் Host செய்யப்படுகின்றன. எனவே Hosting பெறாமல் Wordpress வலைத்தளத்தினை நீங்கள் உருவாக்க நினைக்கலாம். எடுத்துக்காட்டாக,...

How to set up web push notifications in Tamil

How to set up web push notifications in Tamil

உங்கள் வலைதளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உங்களது Update-களை Notification ஆக உங்கள் பார்வையாளர்களுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.இந்த...

How to activate free SSL in Tamil

How to activate free SSL in Tamil

SSL என்பது Secure Sockets Layer ஆகும். இவை உங்கள் வலைதளத்தின் அனைத்து பக்கங்களையும் http-யிலிருந்து https-ஆக Encript செய்து வலைதளத்தை பாதுகாப்பாக வைக்க...

Connect Google Analytics to WordPress in Tamil

Connect Google Analytics to WordPress in Tamil

உங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த தற்போது உள்ள பார்வையாளர்களில் விருப்பத்தை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு வலைதளத்தை செயல்படுத்துவது அதிக...

Write English without grammatical error – Grammarly in Tamil

Write English without grammatical error – Grammarly in Tamil

நான் அனைவராலும் ஆங்கிலத்தில் எழுத முடியும். ஆனால், எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையின்றி எழுத முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். எனவே இவற்றை சரி...

How to get Google indexing within a minute

How to get Google indexing within a minute

உங்கள் வலைதளத்தில் Rankmath SEO setup செய்து உங்கள் வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகளை Google search Console பயன்படுத்தி Google search Engine-ல் Indexing...

How to install Elementor PRO Plugin in Tamil

How to install Elementor PRO Plugin in Tamil

உலகில் பலர் Wordpress என்னும் செயலியை பயன்படுத்தி அவர்களது வலைதளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வலைதளத்தை உருவாக்குவதற்கு ஒரு Theme மட்டுமே...

How to Setup Rank Math SEO plugin in Tamil

How to Setup Rank Math SEO plugin in Tamil

வலைதளங்களுக்கு SEO Optimization என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். SEO Optimization-ஐ பொறுத்தவரையில் சிறந்த SEO Plugin-ஐ உபயோகித்து Setup செய்வது...

Top 8 must use chrome extensions in Tamil

Top 8 must use chrome extensions in Tamil

ஆன்லைன் வருமாநீங்கள் ஒரு வலைத்தளத்தை வடிவமைப்பதற்கான சில யோசனைகளை பல வலைதளங்கள் இடமிருந்து பெற நினைக்கின்றீர்கள் எனில் இந்த Google Chrome Extensions...

Comments

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *