WordPress Blogs-ஐ பொறுத்தவரையில் Featured Images என்பது மிகவும் முக்கியமான மற்றும் பார்வையாளர்களை உங்கள் வலைதளத்தினை நோக்கி ஈர்க்கும் ஒரு முக்கிய அங்கமாகும். ஒவ்வொரு Post-க்கும் ஒவ்வொரு Featured Image-ஐ பயன்படுத்தி உங்களது கருத்துக்களை பார்வையாளர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். உங்கள்வு வலைபதிவு புகைப்படங்கள் ஒவ்வொன்றும் 100 வார்த்தைகள் அடங்கிய கருத்துக்களுக்கு சமமாகும்.
Add Featured Images in Tamil
உங்கள் வலைதளத்திலுள்ள Media Library-ஐ பயன்படுத்தி உங்களால் வலைபதிவிற்கு Featured Image-ஐ தேர்ந்தெடுக்க இயலும். நீங்கள் WordPress-க்கு புதியவர் மற்றும் உங்கள் வலைப்பதிவு/தளத்தில் படங்களைக் காண்பிப்பதில் சிக்கல் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் வழிகாட்டு பாருங்கள், இந்த புகைப்படங்களை எவ்வாறு சரியாக வரையறுப்பது என்பதை நீங்கள் அறியலாம்.
Edit the post or page
முதல் படியாக, உங்களது WordPress வலைதளத்திற்குள் உள்நுழைந்து, நீங்கள் Featured Image-ஐ தேர்ந்தெடுக்க விரும்பும் வலைபதிவு/வலைபக்கத்தில் உள்ள Edit என்ற விருப்பத்தினை கிளிக் செய்ய வேண்டும்.

Click on “Set Featured Image”
அடுத்தபடியாக உங்கள் Gutenburg Editor-ல் இடது பக்கத்தில் உள்ள “Set Featured Image” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

Choose an Image from Media Library
Set Featured Image என்ற இணைப்பைக் கிளிக் செய்த பிறகு ஒரு Pop-up திறையில் தோன்றும், இது WordPress-ல் Media Library வழியாக உங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அனைத்து படங்களையும் காண்பிக்கும்.
அவற்றில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் படத்தைக் கிளிக் செய்யலாம் அல்லது உங்கள் கணினியிலிருந்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தைதினை தேர்ந்தெடுத்து Drog & Drop செய்யலாம் அது தானகவே உங்கள் தளத்தில் பதிவேற்றப்படும்.

Click on “Set featured image” blue button
உங்கள் Featured Image-ஐ தேர்ந்தெடுத்ததும், Popup விண்டோவில் உள்ள நீல நிற “Set Featured Image” பொத்தானைக் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட புகைப்படமானது வலைபதிவு அல்லது வலைபக்கத்திற்கு Featured Image ஒதுக்கப்படும்.

Tips
உங்கள் Set Featured Image எவ்வாறு சரியாக அமைப்பது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். அடுத்த கட்டமாக WordPress-ல் உள்ள புகைப்பட்த்தினை Resize எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அறிந்துகொள்வது உங்கள் எதிர்கால Blogging செயல்பாடுகளுக்கு மிகவம் உதவும்.